Tuesday, 24 July 2012

நெருப்பு கோழி பறவையா, விலங்கா ?


நெருப்பு கோழி :


    நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, அது விலங்கு என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபை அறிவித்துள்ளது.
    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நெருப்பு கோழி பற்றி சுவாரசியமான சர்ச்சை எழுந்தது. கடைசியில் நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, விலங்கு இனத்தை சேர்ந்ததுதான் என்று சட்ட திருத்தம் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது என்று கூறி சட்ட திருத்தத்தில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த புதன்கிழமை (18.7.2012) சட்டசபையை மீண்டும் கூட்டி நெருப்பு கோழி பற்றி விரிவாக விவாதம் நடத்தினர். கடைசியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நெருப்பு கோழி விலங்குதான் என்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் சட்டத் துறை அமைச்சர் ரானா சனா கூறுகையில், ஆடு போன்ற விலங்குகள் பட்டியலில் நெருப்பு கோழியும் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இறைச்சி பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க நெருப்பு கோழி விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
    உலகம் முழுவதும் இறைச்சிக்காக நெருப்பு கோழி மற்றும் அதன் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. நெருப்பு கோழியின் இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

நெருப்புக்கோழி சில சில சுவாரஸ்யங்கள் 

1* நெருப்புக்கோழியின் எடை 60 முதல் 120 கிலோ வரை இருக்கும்.
 இதன் உயரம் ஐந்து முதல் ஆறு அடி வரை இருக்கும். சாதாரண கோழிகளுக்கு கால்களில் நான்கு விரல்கள் இருக்கும் இதற்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். இதன் ஆயுள் 68 ஆண்டுகள். 

2* இது ஆண்டுக்கு 10 முட்டைகள் மட்டுமே இடும். நெருப்புக்கோழியின் முட்டைதான் உலகிலேயே மிகப்பெரியது. சாதாரண கோழி முட்டையை விட இது 40 மடங்கு பெரியது. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தியும் அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால் கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடுமாம். பின்னர், கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வை திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்க்கக் கூடிய சக்தி உள்ளது. 

3* நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடிக் கூடியவை. உறுதியான கால்களும், இரும்பு போன்ற அலகும் கொண்டது. ஒரே உதையில் மனிதனை கொல்லக் கூடிய அளவுக்கு இதன் கால்கள் வலிமையானவை. அதேபோன்று, இது தனது அலகால் கொத்தினால், மனிதனின் மண்டை ஒட்டிலேயே ஓட்டை விழுந்துவிடுமாம். 

3* நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியவை. மாமிச பட்சிணிகளுக்குத் தேவையான உப்பு அவற்றின் இரையின் சதையிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கிடைத்து விடுகிறது. ஆனால், சாகபட்சிணிகளுக்கு தாவரங்களிலிருந்து சோடியம் குளோரைட் உப்பு கிடைப்பதில்லை. எனவே, அப்பிராணிகள் உவர் மண்ணைத் தின்று உப்பைப் பெறுகின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷியத்தை சிறுநீர் மூலமாக வெளியே தள்ள உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. 

No comments:

Post a Comment