ஈமு கோழி வளர்ப்பு
ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.
|
இன வேறுபாடு கண்டறிதல்
- பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.
- எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.
- பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.
ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.
அதற்கு
- ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
- அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.
ஈமு பறவைகள் சாதுவானவை. எனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்ல. அதிலும் சற்று வயது முதிர்ந்த பறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.
ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.
ஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.
ஈமு கோழிகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகப் பிடித்து வளர்க்கவேண்டும்.
- பாலினம் கண்டறிதல்
- அடையாளச் சீட்டு, கால் வளையம் மற்றும் மின்சார முறையில் அடையாளக் குறியிடுதல்.
- சிகிச்சைகள்
- மருந்தளித்தல்
- ஒட்டுண்ணிகள் தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல்
- சிறிய ஊசிகள் (அ) அறுவை சிகிச்சை செய்தல்
தோற்றம் | : | ஆஸ்திரேலியா |
குடும்பம் | : | ராட்டைட் |
பயன்கள் | : | எண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள் |
வாழ்நாள் | : | 30 வருடங்கள் |
பொரிக்கும் போது குஞ்சின் எடை | : | 400-450 கி |
முதிர்ந்த கோழியின் உடல் எடை | : | 50-70 கிகி |
உயரம் | : | 5-6 அடி |
பருவமடையும் வயது | : | 18-24 மாதங்கள் |
விற்பனை வயது | : | 15-18 மாதங்கள் |
பாலின விகிதம் | : | 1:1 |
ஓடும் வேகம் | : | 60 கிமீ / மணிக்கு |
ஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும் முட்டைகள் | : | 50 முட்டைகள் |
இனச்சேர்க்கை வயது | : | 2-40 வருடங்கள் |
அடைகாக்கும் காலம் | : | 50-54 நாட்கள் |
முட்டையின் எடை | : | 680 கிராம் |
இடஅளவு | : | ஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100×25 அடி |
ஈமு கோழியைப் பிடிப்பதற்கு | : | தோலினால் ஆன கையுறை |
No comments:
Post a Comment